புவனகிரி அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்த அரசு பேருந்து ஓட்டுனரால் பரபரப்பு.m - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 August 2024

புவனகிரி அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்த அரசு பேருந்து ஓட்டுனரால் பரபரப்பு.m


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பூ கொளக்குடி கிராமம் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரை அடியாட்களை வைத்து வழிமறித்து தாக்க முற்பட்டு கொலை மிரட்டல் விடுத்த அரசு பேருந்து ஓட்டுநரின் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



வடலூர் அரசு போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான தடம் எண் 24 என்ற பேருந்தை பூ கொளக்குடி பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் இயக்கி வருகிறார், இவரின் சொந்த கிராமத்தின் வழிதடத்தில் இயங்கும் பேருந்து என்பதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே வழிதடத்தில் பேருந்தை இயக்கி வருகிறார்.



இந்நிலையில் வடலூரில் இருந்து சுமார் இரவு 7.50 மணிக்கு சிதம்பரம் நோக்கி புறப்பட்ட பேருந்து, சுமார் இரவு 8.30மணி அளவில் மருதூர் சாலையில் உள்ள மௌன மைவுஸ் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அந்தபேருந்தில் முன்பக்க முகப்பு விளக்குகள் இல்லாமலும் பேருந்தில் உள்பகுதியில் உள்ள விளக்குகள் அனைத்தும் எரியாமலூம் இருள் சூழ்ந்தவாறு முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியை வைத்துக்கொண்டும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தை வைத்துக் கொண்டும் பயணிகளின் உயிரை பற்றி துளியும் கவனத்தில் கொள்ளாமல் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பேருந்தை இயக்கியுள்ளார்


அவ்வழியே இருசக்கர வாகனத்தின்  பயணம் செய்த செய்தியாளர் ஒருவர் இதனை கண்டதும் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற போது ஓட்டுநர் மோகன் என்பவர் அவரது செல்போனை புடுங்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார், மேலும் தனது சொந்த ஊருக்கான வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்து என்பதால் தனது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட செய்தியாளர் பு.கெளக்குடி கிராமம்  பால்வடி அருகே வந்த பொழுது அவரை வழிமறித்து அவரின் இரு சக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி ரகலையில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட செய்தியாளர் மருதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு மேற்கொள்ளாமல் சமாதானம் பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.


இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, பல்வேறு பகுதிகளில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க செல்லும் பொழுது தாக்கப்படுவது தொடர் கதை ஆகி வரும் நிலையில் அரசு துறையில் பணி மேற்கொள்ளும் அரசு ஓட்டுநர் இது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது


சம்பந்தப்பட்ட அரசு ஓட்டுநர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் மீண்டும் அதே வழித்தடத்தில் பேருந்தை இயக்க அனுமதி வழங்கியது யார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது மேலும் ஆளும் கட்சி சேர்ந்த சங்கத்தில் பதவி வகிக்கிறார் என்ற காரணத்தினால் அவர் மீது எழும் புகாருக்கு சம்பந்தப்பட்ட வடலூர் பணிமனை மேலாளர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் இது போன்ற அரசு ஓட்டுநர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

*/