புவனகிரியில் வெள்ளாறு மற்றும் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டக் கோரி வணிகர்கள் அடையாள கடையடைப்பு போராட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 August 2024

புவனகிரியில் வெள்ளாறு மற்றும் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டக் கோரி வணிகர்கள் அடையாள கடையடைப்பு போராட்டம்.


கடலூர் மாவட்டம் புவனகிரி, கொள்ளிடத்தில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும் புவனகிரி வெள்ளாற்றிலும், கொள்ளிடத்திலும் தடுப்பணைக் கட்ட கோரிக்கை வைத்து புவனகிரி வணிகர் சங்கங்கள் சார்பாக கடையடைப்புப் போராட்டம்  நடைபெற்றது. காலை 11 மணி வரை நடைபெற்ற அடையாள கடையடைப்பு போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

காலையிலேயே பரபரப்பாக காணப்படும் கடைத்தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புவனகிரி அருகே ஆதிவராகநல்லூர் வெள்ளாற்றில் சுமார் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கடலூர் மாவட்டம் கருப்பூர்- மயிலாடுதுறை மாவட்டம் மாதிரவேளூர்  என  இருகிராமங்களிடையே உள்ள கொள்ளிடம் ஆற்றில்  கதவணையுடன் கூடிய 400 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்படும் என்ற அறிவிப்புகள் வெளியிட்டு அதற்கான நிலம் கையகப்படுத்த பணிகளும் அளவீடுகளும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆட்சியில் அமைந்துள்ள இந்த அரசு திட்டங்களை செயல்படுத்த போதுமான நிதி இல்லை என தற்போது வரை இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. 


இதற்கு இப்பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்களும், வணிகர்களும், பொதுமக்களும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.  கடல் நீர் உட்புகுந்ததால் தற்போது இப்பகுதி கிராமங்களில் குடிநீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. மொத்தத்தில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகளும் பொதுமக்களும் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/