கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆகியவற்றின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று துவங்கிய யாகசாலை பூஜையில் நான்கு காலங்களாக யாகசாலை பூஜையில் புனித நீர் கலசங்களுக்கு மங்கல இசை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி புண்ணியகவாஜனம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று இன்று கடம் புறப்பாடு துவங்கியது.
ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட புனித நீர் கலசம் கோவில் கோபுரத்தின் மேல் கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆகியவற்றின் கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவினைக்கான பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment