சேத்தியாத்தோப்பில் சிதம்பரம் பாராளுமன்றத்திற்கு அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனுக்கு நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 April 2024

சேத்தியாத்தோப்பில் சிதம்பரம் பாராளுமன்றத்திற்கு அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனுக்கு நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பு.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாராளுமன்றத்திற்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனுக்கு இரட்டை இலையில் வாக்களிக்குமாறு அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பெருந்திரளாகக் கூடியிருந்த பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பில் ஆளும் திமுக அரசைப் பற்றி கூறும்போது, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசுதான் திமுக அரசுஎன்று பொதுமக்களிடையே பலவற்றை எடுத்துக் கூறி இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு பெருந்திரளாக கூடியிருந்த மக்களிடையே வாக்கு சேகரித்தார். 

சேத்தியாத்தோப்பு அதிமுக நகரச் செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில்கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,புவனகிரி எம்எல்ஏவுமாகிய அருண்மொழிதேவன், சிதம்பரம் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும்வேட்பாளர் சந்திரகாசன் மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் வருகை தந்து இந்த தேர்தல் பிரச்சார சிறப்பு  நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

*/