ஜெயங்கொண்டான் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 November 2023

ஜெயங்கொண்டான் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம்  ஜெயங்கொண்டான் ஊராட்சியில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு  சிறப்பு கிராம சபை கூட்டம்    ஊராட்சி இ சேவை கட்டிட  வளாகத்தில்  ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி  தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி பல்வேறு தீர்மானங்களைநிறைவேற்றி வாசித்தார்.

ஜெயங்கொண்டான்  ஊராட்சிக்குட்பட்ட  பகுதியைச் சேர்ந்த 50க்கும்  மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற கோரியும் அப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்வுக்கான வேண்டும் என வலியுறுத்தி காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மேலும் முந்தைய கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், சாலை வசதிபள்ளி குழந்தைகளுக்கு குடிநீர் வசதி அடிப்படைக் கட்டமைப்பு போன்ற   பல்வேறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

*/