கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன். மாதவன் திருமணம் ஆகாதவர் வயது .30 விவசாயி இவர் நேற்று மதியம் 2.00 மணி அளவில் அவருக்கு சொந்தமான வயலில் நெற்பயிருக்குமின் மோட்டார் மூலம் தண்ணீர் பாசுவதற்கு மின் மோட்டாரை இயக்க ஸ்விட்ச் போட்டார் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதவன் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் மேலும் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:
Post a Comment