திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு (17/12/2023) அன்று சேலத்தில் நடைபெறும் என தலைமை திமுக அறிவித்துள்ளது, இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம். அவர்களின் வழிகாட்டுதலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் விளையாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகியோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சேலத்தில் நடைபெறவிருக்கும் இளைஞர் அணி மாநாட்டில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடலூர் நகராட்சி, குறிஞ்சிப்பாடி பேருராட்சி, மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட இளைஞர்கள் பெரும்பாண்மையாக கலந்துகொள்ள வேண்டுமென்று ஆலோசனை வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment