சேத்தியாத்தோப்பு அருகே முகந் தரியாங்குப்பம் கிராமத்தில் சாலை மறியல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 December 2022

சேத்தியாத்தோப்பு அருகே முகந் தரியாங்குப்பம் கிராமத்தில் சாலை மறியல்.

சேத்தியாத்தோப்பு அருகே முகந் தரியாங்குப்பம் கிராமத்தில்  சாலை மறியல்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே முகந்தரியாங்குப்பம் கிராமத்தில் ஊர் பொதுவில் உள்ள இடத்தில் இருக்கும் கன்னியம்மன் கோவிலில் சூலம் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை புதுப்பிப்பதற்கு ஒரு பிரிவினர் முயன்று வருகின்றனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அந்த இடத்தில் கான்கிரீட் பில்லர்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் இந்த கோவிலின் இடம் வேறொரு பிரிவினருக்கு சொந்தமானது என திடீரென பிரச்சனை எழுந்தது.இந்நிலையில் கன்னியம்மன் கோவிலை கட்டக்கூடாது என மற்றொரு பிரிவினர் தடுத்ததாக கூறப்படுகிறது. ஊர்ப்பொதுவில் இருக்கும் பழமையான கன்னியம்மன் கோவிலைப் புதுப்பிப்பதற்கு யாரையும் கேட்க வேண்டியதில்லை எனவும்,


இதனைக் கண்டித்தும் முகந்தரியாங்குப்பம் கிராம மக்கள்  50க்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து  சேத்தியாத்தோப்பு- விருத்தாசலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போலீசாரின் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக  கைவிடப்பட்டது. சுமுகமான தீர்வு எட்டப்படும் என காவல்துறையினர் அளித்துள்ள வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றாவிட்டால்  மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் .

No comments:

Post a Comment

*/