அந்த அறிவுரையின் பேரில் இன்று 14.09.2022 ஆம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வண்டிபாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி, புவனகிரி அரசு உயர்நிலைப்பள்ளி, சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, பரங்கிப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, அண்ணாமலை நகர் ராணி சீதாமணி மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் பேருந்து நிறுத்தம், விருதாச்சலம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி, மங்கலம்பேட்டை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, கம்மாபுரம் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆலடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கருவேப்பிலங்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி, குள்ளஞ்சாவடி ஜீவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மந்தாரக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டுமன்னார்கோயில் அரசினர் உயர்நிலைப்பள்ளி, சேத்தியாதோப்பு வள்ளலார் மேல்நிலைப்பள்ளி, சோழதரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, நெல்லிக்குப்பம் கிருஷ்ணசாமி கல்லூரி, நடுவீரப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காடாம்புலியூர் அண்ணா பல்கலைக்கழகம், திட்டக்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பூர் SMR மேல்நிலைப்பள்ளி, ஆவினங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிறுபாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய காவல் நிலைய சரகங்களில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் போதை தடுப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்கள்.
கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கபடுவதோடு, பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் தடைப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கஞ்சா, குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் தயக்கமின்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
No comments:
Post a Comment