வேப்பூர் அருகே திருப்பெயர் ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 May 2022

வேப்பூர் அருகே திருப்பெயர் ஊராட்சி மன்ற துணை தலைவர் போட்டியின்றி தேர்வு


வேப்பூர் அருகே திருப்பெயர் ஊராட்சி மன்ற துணை தலைவராக கலைச்செல்வி பரமசிவம் போட்டியின்றி தேர்வு


கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியத்தில் திருப்பெயர் மற்றும் பாசிகுளம் ஊராட்சியின்  துணை தலைவர்கள் இறந்துவிட்டதால் மே 25, ந் தேதி நேற்று நல்லூர் பிடிஒ, சிவகுருநாதன் தலைமையில்  துணை தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது  


வேப்பூர் அடுத்த  திருப்பெயர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு  ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதம் ராமசாமி முன்னிலையில்  மண்டல துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் காலை 10 : 15 மணிக்கு     கலைச்செல்வி பரமசிவம் (வயது 50) என்பவர், தனது ஆதரவாளர்களான கஸ்தூரி, ஜெயராமன், வெண்ணிலா ஆகியோருடன் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்தார்


அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி கலைச்செல்வி பரமசிவம்  ஊராட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார் 


அதேபோல் பாசிகுளம் ஊராட்சியில் தேர்தல் அலுவலரும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான எலிசபெத்திடம் ஜெ, லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார்

அதனை தொடர்ந்து அவரும் போட்டியின்றி துணை தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்

No comments:

Post a Comment

*/