ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் சுற்று இலவச பயிற்சி நிறைவு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 May 2022

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் சுற்று இலவச பயிற்சி நிறைவு


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் சுற்று இலவச பயிற்சி நிறைவு


கடலூர் மாவட்டம்,சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கல்வியியல் துறையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த இலவச ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் சுற்று பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தது.  


இதற்கான நிறைவு விழா கல்வியியல் துறையில் வைத்து நடைபெற்றது. கல்வியியல் துறை தலைவர் பேராசிரியர். வீ. அம்பேத்கார் அவர்கள் தலைமை தாங்கினார். மாணவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெல்ல வேண்டும். பல்கலைக் கழகத்திற்கும் துறைக்கும் பெருமை தேடித்தர வேண்டும். மாணவர்கள் தங்கள் வாழ்வை, கல்வி என்னும் கைவிளக்கால் வெளிச்சமாக வேண்டும். தன்னையும் காத்து, குடும்பத்தையும் காத்து, சமுதாயத்தையும் நாட்டையும் உயர்த்தும் வகையில் உங்களுடைய ஆசிரியப் பணி அமைய வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்று பேசினார். 


இணைப் பேராசிரியர்களான டாக்டர்.த.தமிழ்செல்வன் வரவேற்றுப் பேசினார் டாக்டர்.எஸ்.கே. சிவசுப்பிரமணியன் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். டாக்டர்.எஸ்.ஆண்டாள் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். பழனியில் இருந்து வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆயக்குடி மக்கள் மன்ற ஆசிரியர்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பல கருத்துக்களையும் எளிதில் வெற்றி பெற எளிய வழிகளையும் சொல்லிக் கொடுத்தார்கள். பயிற்சியளித்த ஆசிரியர்கள் பாராட்டப் பட்டார்கள். மாணவர்கள் வகுப்பை தொடர்ந்து கவனித்து வந்ததால் மிக்க பயன் அடைந்ததாக பின்னூட்டம் தெரிவித்தனர். தொடர்ந்து இலவசமாக பயிற்சிகளும் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப் படுகின்றன.

No comments:

Post a Comment

*/