கடலூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்வண்டி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி மாபெரும் ஆர்பாட்டம்! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 April 2022

கடலூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர்வண்டி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி மாபெரும் ஆர்பாட்டம்!



கடலூர்-பாண்டி-சென்னை ECR திட்டம் மற்றும் 9 ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது


இதற்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன் ரவிச்சந்திரன், மகேஷ், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழ. தாமரைக்கண்ணன், தேவதாஸ் படையாண்டவர், மாநில நிர்வாகிகள் சந்திரசேகரன், கோபிநாத், ரத்தினவேல், சகாதேவன், ரமேஷ், மதி, அன்பு, பால்ராஜ், ஆனந்த், ஆறுமுகம், பிரேம், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்; கா. வேலு 

No comments:

Post a Comment

*/