அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் இனியாவது மக்கள் நினைத்தது நடக்குமா??? - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 March 2022

அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் இனியாவது மக்கள் நினைத்தது நடக்குமா???


அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் இனியாவது மக்கள் நினைத்தது நடக்குமா???         

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சி இதில் கடந்த காலங்களில் நிறைய ஊழல் உள்ளதாக மக்கள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனர் அதற்கு சரியான தீர்வு இல்லை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் உள்ளன இதில் நிறைய பிரச்சினைகள் உள்ளது பேரூராட்சிக்கு உட்பட்ட குளங்கள் உள்ளன அதை சரியாக பராமரிப்பு இல்லை அந்த குளங்களில் சரியாக தூர்வார வில்லை ஆகாயத்தாமரை உள்ளது சானா ஓடை ஒன்று உள்ளது அதில் ஆகாயத்தாமரை நிறைய உள்ளது பலதடவை அதிகாரிகளிடம் சொல்லி அலுத்துப் போய்விட்டது வீடியோ மக்கள் உபயோகப்படுத்த வழியில்லை இதுவரை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை தண்ணீர் வசதி மின்சார வசதி ரோடு வசதி என எதுவும் சரியாக நடைபெறவில்லை அதிலும் முக்கியமாக 11வது வார்டு மக்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுகின்றன அவர்களுக்கு சரியான முறையில் அது கிடையாது சாலை சரியாக இல்லை குப்பை அள்ளுவது கிடையாது வரி மட்டும் தவறாமல் வாங்கி கொள்ளப்படுகிறது மக்கள் பாவப்பட்ட மக்களாக உள்ளனர் .

இந்த அண்ணாமலைநகர் சிறப்புநிலை பேரூராட்சியில் வருமானம் அதிகம் இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருக்கிறது இந்த பேரூராட்சியில் இதுவரை ஆக எதுவும் நடைபெறவில்லை செயல்அலுவலர் இருந்தும் இல்லாதது போலிருந்தது அவரிடம் பலமுறை சொல்லி மக்கள் ஏமாந்தது மிச்சம் தற்போது பதவியேற்று கொண்ட தலைவர்கள் கவுன்சிலர்கள் மறக்காமல் மக்கள் பணியாற்றுவார்கள் என மக்கள் நம்புகிறோம் பேரூராட்சியில் முக்கியமான ஒரு மிகப்பெரிய பிரச்சனை பாதாள சாக்கடை பிரச்சனை இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை பல வருடங்களாக மக்கள் கஷ்டப்படுகின்றனர் இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாதாள சாக்கடை இருக்கிறது இதில் நிறைய பேர் மறைமுகமாக இணைப்பு கொடுத்துள்ளனர் இதையும் அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை இது மட்டுமில்லாமல் இன்னும் சிறுசிறு பிரச்சினைகள் உள்ளது நீண்ட வருடத்திற்கு பிறகு திமுக வசம் பேரூராட்சி வந்துள்ளது ஆகையால் தலைவர்கள் கவுன்சிலர்கள் இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்களா திறந்து பார்க்கவும் முக்கியமாக அலுவலகத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை கலை எடுப்பார்களா பேரூராட்சிக்கு வாங்கப்படுகின்றன பொருட்கள் அனைத்திற்கும் சரியான முறையில் கணக்கு காட்டுவார்களா இதையெல்லாம் திமுக அரசு கேட்க வேண்டும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக மைத்துனரே நடக்கும் என நம்புகிறோம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்................


செய்திகள்; K. அருள்ராஜ்

No comments:

Post a Comment

*/