கடலுார் மாவட்டத்தில் 1 மாநகாரட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் உள்ள 447 கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்தது. 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெற்றி பெற்ற 447 வார்டு கவுன்சிலர்களும்(02/03/2022 ) அன்று புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் பதவி அவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி பிரமாண உறுதி மொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் யார், யார் தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் பேட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
லால்பேட்டை 7 இடங்களில் வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக மனிதநேய மக்கள் கட்சியின் பாத்திமா ஹாரிஸ் ( தமுமுக மற்றும் மமக மாவட்ட தலைவரின் மனைவி ) தேர்வு செய்யப்பட்டார்.துணை தலைவராக J.M அன்ர் சதாத் அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
செய்தியாளர்: K. அருள்ராஜ்
No comments:
Post a Comment