பண்ருட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

பண்ருட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது!!!


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்  ரோட்டரி சங்கம் மற்றும் பண்ருட்டி நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்துகளை குழந்தைகளுக்கு போடப்பட்டது

மேலும் நகராட்சிஅலுவலகம்,  மருத்தவமனை, கோவில், மார்க்கெட் , அங்கன்வாடி உள்ளிட்ட33 இடங்களில் போலீயோசொட்டுமருந்து போடும்முகாம் நேற்று காலை 7 மணி முதலில் தொடங்கி நடைபெற்றது இதில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆர்வமாக போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டனர்,

முகாமில்  ரோட்டரிசங்க தலைவர் ஆசிரியர்  ஏழுமலை கலந்து கொண்டு 5 வயதுக்கு
உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கி முகாமைதொடங்கி வைத்தார். .
நிகழ்ச்சியில் வர்த்தக சங்கம்  ரோட்டரி சங்கம்  நகர ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர் ராம்சுந்தர் மற்றும் செவிலியர்கள் சொட்டு மருந்து வழங்கும்
பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சி மேலாளர் ரவி, என்ஜினியர் சிவசங்கர், துப்புரஅலுவலர் முருகேசன்,
ஆய்வாளர்கள் ஜெயசந்திரன், நகராட்சி ஊழியர்கள் பிரகாஷ், கொளஞ்சி,
சிவலிங்கம், சீனு, அசோகன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டியில் இருந்து தமிழக குரல் செய்தியாளர் : வா.சீராளன்

No comments:

Post a Comment

*/