தற்சமயம் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் குறைந்து உள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 07.03.2022 முதல் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
ஆகவே, 07.03.2022 அன்று நடைபெற உள்ள பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தங்களின் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு செய்துகுறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாராந்திர பொதுமக்கள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் புதிய இணையதள பதிவு (CM HELPLINE/MUDHALVAN MUGAVARI ) நடைமுறையின் படி தங்களது மனுவில் ஆதார்அட்டை எண், செல்லிடை பேசி எனர் மற்றும் குடும்ப அட்டை எனணர்(smart card) ஆகியவற்றை மனுவில் தவறாமல் பதிவு செய்து மனு செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பொது மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் கூட்டத்திற்கு வரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம். இஆப.அவர்கள் தெரிவித்தார்
No comments:
Post a Comment