வடலூர் பகுதியில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை மொத்த விற்பனை செய்து வந்த இருவர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 November 2022

வடலூர் பகுதியில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை மொத்த விற்பனை செய்து வந்த இருவர் கைது.

வடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை பெங்களூரில் இருந்து வரவழைத்து மொத்த விற்பனை செய்து வந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 


வடலூர் பகுதியில் பெங்களூரில் இருந்து ஹன்டஸ் பாக்கெட் கொண்டுவரப்பட்டு பெட்டி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டனர் அப்பொழுது வடலூர் விருதாச்சலம் சாலை பொட்டுக்கடலை கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வடலூர் பார்வதிபுரம் கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் வயது 53 s/o காளைசாமி என்பவரை ரகசியமாக பின் தொடர்ந்தனர்.


இந்நிலையில் அவர் மந்தாரக்குப்பம் பெரியாகுறிச்சி  சரவணா பெட்டிக்கடையில் பெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 53 என்பவரிடம் விற்பனைக்காக கொடுத்த போது அங்கு இருந்த வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் உதவி ஆய்வாளர் சங்கர் அவர்கள் தலைமையிலான போலீசார் இருவரையும் கையளவுமாக பிடித்து வடலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பெங்களூரு பகுதியில் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி வந்து வடலூர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் வேல்முருகன் என்பவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் அங்கு ஏழு பாலத்தின் சாக்கு மூட்டைகள் மற்றும் ஒரு அட்டைப்பெட்டியில் ரூபாய் 80 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ் பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் அதனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment