தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 280 முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமினை வேளான்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பள்னீர்செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம். இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி வட்டம் கோதண்டராமபுரம் ஊராட்சியில் இன்று தொடங்கிவைத்தார். இம்முகாம்களின் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது மேலும் குறிஞ்சிப்பாடி வட்டம் கட்டியங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 4 முழுநேர நியாயவிலைக்கடைகளும், 5 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் செயல்பட்டு வருகிறது.

இதில் கட்டியங்குப்பம் முழுநேர நியாயவிலைக்கடையில் கருப்பச்சாவடி, கிருஷ்ணங்குப்பம் ஆகிய பகுதி நேர கடைகளுடன் 1235 குடும்ப அட்டைகளை கொண்டு செயல்பட்டு வந்தது. தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத்திட்ட பொருட்கள் சீரான முறையில் கிடைத்திட ஏதுவாக கிருஷ்ணாங்குப்பம் பகுதிநேர கடையினை முழுநேர நியாயவிலைக்கடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இதன் மூலம் 507 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) குபேந்திரன், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் நந்தகுமார், சிதம்பரம் செயற்பொறியாளர்(நீர்வளத்துறை) காந்தரூபன், விருத்தாசலம் செயற்பொறியாளர்(நீர்வளத்துறை) அருணகிரி, பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) வெள்ளிவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment