கடலூரில் ஏழை மாணவ மாணவிகள் பாட சாலையில் தீபாவளி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 October 2022

கடலூரில் ஏழை மாணவ மாணவிகள் பாட சாலையில் தீபாவளி கொண்டாட்டம்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் தீர்த்தனகிரி ஊராட்சி பொட்டக்கரைமேடு கிராமத்தில் நடைபெறும் பிளஸ் நிறுவனத்தின் மாலை நேர பாடசாலையில் படிக்கும் மாணவ செல்வங்களுடன் தீபாவளி விழா கொண்டாப்பட்டது.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தலைமையாசிரியர் திருமதி கங்காதேவி கலந்து கொண்டு 40க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பாட உபகரணங்கள் நோட்டு புத்தகங்கள் வழங்கியும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கூடுதலாக பாய் தலையணை போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கினார்.


பின்னர் தீபாவளியை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மாணவ மாணவிகளோடு பட்டாசுகள் வெடித்து தீபாவளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிலம்பரசன், ஜெபராஜ், சாமுவேல் செல்லதுரை, ஒருங்கிணைப்பாளர் ஸ்டனிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment