மான்யவர் கான்ஷிராம் அவர்களின் நினைவு நாள்; பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிறப்பு கருத்தரங்கம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 October 2022

மான்யவர் கான்ஷிராம் அவர்களின் நினைவு நாள்; பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிறப்பு கருத்தரங்கம்.

மான்யவர் கான்ஷிராம் அவர்களின் நினைவு நாளான இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரில் பகுஜன் சமாஜ் கட்சி- கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பாபாசாகிப் அம்பேத்கரும் தாதாசாகேப் கான்ஷிராமும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


கருத்தரங்கத்திற்கு பாம்சப் மாவட்ட அமைப்பாளர் க. அருள்மொழி அவர்கள் தலைமை வகித்தார்.  மாவட்ட அமைப்பாளர் இரா.தொல்காப்பியன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் திருமதி உமாமாலினி அவர்கள் முன்னிலை வகித்தார்.


சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் பா. ரஞ்சித் அவர்கள் கருத்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில் முருகன், மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன் கிழக்கு மாவட்ட தலைவர் தணிகைச் செல்வன், கிழக்கு மாவட்ட துணை தலைவர் மு.அமர்நாத், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ் கிழக்கு மாவட்ட பொருளாளர் இரா. விஜயகாந்த், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ். எஸ் .ஸ்ரீகாந்த், , மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜெ. பிரகாஷ், மாவட்ட அலுவலக செயலாளர் ப.நடராஜன், தெற்கு மாவட்ட பொருளாளர் சுபாஷ்போஸ், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் தன. வேலாயுதம், குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் மோகன்தாஸ், குறிஞ்சிப்பாடி தொகுதி பொதுச்செயலாளர் சக்தி என்கிற சசிகுமார், தொகுதி பொருளாளர் கருணாகரன், நெய்வேலி தொகுதி பொதுச் செயலாளர் ஐயப்பன், பண்ருட்டி  தொகுதி பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அலெக்ஸாண்டர், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் கமல்ராஜ், பண்ருட்டி நகர தலைவர் மணி, நகர செயலாளர் பாபு, நெய்வேலி நகர தலைவர் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரசாந்த் நகர் அலுவலக செயலாளர் ஆறுமுகம், பண்ருட்டி ஒன்றிய தலைவர் பழனி,  ஒன்றிய பொருளாளர் தசரதராமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி, அண்ணாகிராமம் ஒன்றிய தலைவர் ரகுநாத், ஒன்றிய செயலாளர் அருண், பண்ருட்டி ஒன்றிய நிர்வாகி தமிழ்ச்செல்வன், ஆனந்த், பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.. 

No comments:

Post a Comment