தனியார் தொழிற்சாலையில் இருந்து டோஸ்ட் வாகனத்தில் இரும்பு கடத்தி வந்த இரண்டு நபர்களை வடலூர் போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

தனியார் தொழிற்சாலையில் இருந்து டோஸ்ட் வாகனத்தில் இரும்பு கடத்தி வந்த இரண்டு நபர்களை வடலூர் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் சங்கர் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் அதிகாலை வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகண தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது TN91J0446 என்ற அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தில் கடலூர் சிப்காட் பகுதியிலிருந்து  இரும்பு பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டனர்.


வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தனர் பின்பு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வடலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆண்டார்முள்ளிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் வயது 34 த/பெ தேவர் என்பதும் மற்றொரு நபர் அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பதும் தெரியவந்தது இவர்கள் இருவரும் கடலூர் நாகார்ஜுனா கம்பெனியிலிருந்து இரும்பு பொருட்களை திருடி  வாகனத்தில் எடுத்துச் செல்ல முற்பட்டது தெரியவந்தது இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


மூன்றாவது நபரான பெரியப்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது 36 என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் 

No comments:

Post a Comment