சைகோட்ரோபிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை மருந்துச்சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது மருந்தக மருந்தாளுனர்களுக்கு அறிவுறுத்தல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 October 2022

சைகோட்ரோபிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை மருந்துச்சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது மருந்தக மருந்தாளுனர்களுக்கு அறிவுறுத்தல்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. சக்திகணேசன் கடலூர் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் தங்கள் காவல் சரகங்களில் உள்ள மருந்தக மருந்தாளுனர்கள் (Medical Pharmacist) கூட்டம் மேற்கொண்டு போதைப்பொருள் உள்ளடக்கிய சைகோட்ரோபிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை மருந்துச்சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது என விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என பிறபித்தார்.


இதனையடுத்து கடலூர் புதுநகர், தேவனாம்பட்டினம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், கடலுார் துறைமுகம், ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், சிதம்பரம் நகர், சிதம்பரம் தாலுக், அண்ணாமலைநகர், கிள்ளை, புவனகிரி, மருதூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், விருத்தாச்சலம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, மங்கலம்பேட்டை, ஆலடி, பெண்ணாடம், நெய்வேலி டவுன்ஷீப், நெய்வேலி தெர்மல், மந்தாரக்குப்பம், ஊமங்கலம், வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, ஒரத்துார், ஸ்ரீமுஷ்ணம், சோழதரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, புத்துார், குமராட்சி, பண்ருட்டி, புதுப்பேட்டை, நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, சிறுபாக்கம், வேப்பூர் ஆகிய காவல் நிலைய சரகங்களில் உள்ள மருந்தாளுனர்களை (Medical Pharmacist) வரவழைத்து மருந்தகங்களில் சைகோட்ரோபிக் மருந்துகளின் உள்ளடக்கம் கொண்ட Alprazolam, tydol, nutriwit, Corex, diazepam, nitrazepam போன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்க கூடாது எனவும், அரசு வழிமுறைகளின்படி மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் எனவும், மருந்தாளுனர்களிடம் எழுத்து மூலம் உறுதிமொழி பெற்று விழிப்புணர்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

No comments:

Post a Comment