வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 October 2022

வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை மற்றும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறிஞ்சிப்பாடி வட்டாரம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் அவர்கள்  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரவையின் தலைவர் கோவி. கல்வி ராயர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுந்தரமூர்த்தி, நல்லதம்பி, சுப்பிரமணியன், சந்திரசேகரன் ஆகியோர் உணவு பாதுகாப்பு பற்றி கருத்துரை வழங்கினார்கள்.


செறிவூட்டப்பட்ட உணவுகள் பற்றி ஜெகதீஸ்வரி அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பவானி அவர்கள் ஊட்டச்சத்து பற்றி கருத்துரை வழங்கினார்கள். நெய்வேலி உமா கேஸ் ஏஜென்சி உரிமையாளர் பாதுகாப்பான சமையல் கூடம் பற்றியும் சிலிண்டர் பயன்பாடு பற்றியும் எடுத்து கூறினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் சிறு தானியங்களை பயன்படுத்தி புட்டு, அல்வா, பக்கோடா, கூழ் போன்ற 200மேற்பட்ட பதார்த்தங்களை தயாரித்து காட்சிப்படுத்தினார்கள். அவர்களில் சிறப்பாக செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பேரவையின்  நிர்வாகிகள் சந்திரசேகரன், கனகசபை, ஆரியா இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment