மாணவர்கள் உருவாக்கிய அப்துல்கலாமின் மணற்சிற்ப்ப உருவம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 14 October 2022

மாணவர்கள் உருவாக்கிய அப்துல்கலாமின் மணற்சிற்ப்ப உருவம்.

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 91வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் துறைமுகம் தூயதாவீது மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் உருவத்தை தலைமைஆசிரியர் என்.கங்காதேவி ஆலோசனையின் பேரில் ஓவிய ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை தலைமையில் மாணவர்கள் மணற்சிற்ப்பத்தால் அப்துல்கலாமின் உருவத்தை உருவாக்கினர்.


பின்னர் ராக்கெட் போன்று மாணவர்கள் அழகாக அணிவகுத்து நின்றனர் மேலும் தலைமைஆசிரியர் என்.கங்காதேவி தலைமையில் மாணவ மாணவிகள் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பொன்மொழிகளை பதாகைகளாக கையில் ஏந்தி  ஊரவலமாக சென்றனர்தமிழை உலக அரங்கில் தலைநிமிர வைத்த ஐயன் திருவள்ளுவருக்கு கன்னியாக்குமரியில் சிலை அமைத்தது போன்று தமிழரை உலகளவில் தலைநிமிர வைத்த  முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுக்கு இராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே திருவுருவசிலை அமைக்க   வேண்டுமுன்றும் முதல்வருக்கு கோரிக்கை முழக்கங்களும் எழுப்பட்டது இது குறித்து மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை கடிதங்கள் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆசிரியர் ஜெபராஜ், லோகநாதன், ஆனந்தராஜ், ஜெஸ்டின், ஜெபஸ்டின், சாமுவேல் செல்லதுரை, வில்சன் மற்றும் பி.எட் பயிற்சி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். 

No comments:

Post a Comment