வடலூர் காவல்துறை மூலம் - வர்த்தகர் சங்கம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

வடலூர் காவல்துறை மூலம் - வர்த்தகர் சங்கம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.சக்திகணேசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நெய்வேலி காவல் உட்கோட்டம் ராஜேந்திரன் அவர்களின் ஆலோசனையின் பேரில் வடலூர் காவல் நிலையம சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் சங்கர் அவர்கள் தலைமையில் வடலூர் வர்த்தகர் சங்கம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் வடலூர் இராமலிங்க ஹோட்டலில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் ஒவ்வொரு கடைகளிலும் மற்றும் ஹோட்டல்களிலும் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும்,   பண்டிகை காலம் என்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனியே இரவு காவலர்கள் நியமிக்கவும் கடைகளில், அலாரம் வைக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


இதில் வள்ளலார் வர்த்தகர் சங்கம் தலைவர்  ராமலிங்கம் ஹோட்டல் உரிமையாளர் கலைச்செல்வன் பொருளாளர் தனசேகரன் (கிருஷ்ணா பேக்கரி உரிமையாளர்) மற்றும் இரத ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment