தெற்கு பிச்சாவரம் அருகே வீட்டின் மீது நேற்று பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி சேதம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 October 2022

தெற்கு பிச்சாவரம் அருகே வீட்டின் மீது நேற்று பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி சேதம்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் நேற்று இரவு பெய்த மழையின் போது அரன்மனை தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது குடிசை வீட்டில் இடி தாக்கியதால் முற்றிலும் சேதமானது. இதனை அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட வீட்டினை பார்வையிட்டு வீடு மற்றும் பொருட்களை இழந்த வெங்கடேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

அப்போது பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ப.அசோகன், குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வை.சுந்தரமூர்த்தி, மாவட்ட கழக இணை செயலாளர் மா.ரெங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், நிர்வாகிகள் தனசிங்கு, ஆதிமூலம், ஸ்ரீதர், மணிகண்டன், கார்த்தி, சொக்கலிங்கம், பாண்டியன், தேசிங்கு பா.ம.க ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment