அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு காதிகிராட்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்மணியம் தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 October 2022

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு காதிகிராட்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்மணியம் தொடங்கி வைத்தார்.

அண்ணல் காந்தியடிகளின் 154-வது பிறந்த நாளினை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், மாநகர மேயர் திருமதி.சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், தொடர்ந்து தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் துவக்க நிகழ்வினை மேற்கொண்டு முதல் விற்பனையை துவக்கிவைத்தார். 


இந்நிகழ்வின் போது சுதந்திர போராட்ட  தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். 2022-2023ம் ஆண்டில் கதர்கிராம தொழில் வாரியத்தின் வாயிலாக இம்மாவட்டத்திற்கு ரூ.155.00 இலட்சம் விற்பனைக் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இக்குறியீட்டை எய்துவதற்கு இம்மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, ஆகிய காதிகிராப்ட்டுகளில் விற்பனை நடைபெற்றுவருகிறது.


மேலும் இச்சிறப்பு விற்பனையை ஊக்கப்படுத்திடும் விதமாக 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களும் பொது மக்களும் கதராடைகளை வாங்கி தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாட மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா,மாமன்ற உறுப்பினர்கள்  ஐ.பார்வதி,சுதா அரங்கநாதன்,செந்தில்குமாரி இளந்திரையன் த.சங்கீதா,த.வ.க அருள்பாபு,ப.ஜ.க சக்திவேல் மாவட்ட மாணவரணி கே.எஸ். ஆர்.பாலாஜி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment