மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 October 2022

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் முகாம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் குறைகேள் முகாம் நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),  கடலூர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு மேற்படி முகாம் 11.10.2022 காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. இம்முகாமில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்  கலந்து கொண்டனர். 


பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) திருமதி.எஸ்.எம். சுதா அவர்கள் தலைமையிலும்  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சு.சவிதா அவர்களின் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் மருங்கூர் குமார் கலந்து கொண்டார்.


MGNREGS திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்குதல், இவர்களுக்கு அனுமதிக்கப்படும் ஊதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குரிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடந்த மாதங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,  இன்று பெறப்படும் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment