காவல் ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 October 2022

காவல் ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா.

1988 செயின்ட் தாமஸ் மவுண்ட் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.ராமதாஸ் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா கடலூர் ஜி. ஆர் ஹோட்டலில் நடைபெற்றது .


இப்பணி ஓய்வு விழாவில் ராமதாஸ் அவர்களுடன் பயிற்சி பெற்ற, தற்போது காவல் உதவி ஆய்வாளராகவும், உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் இணைந்து திரு. ராமதாஸ் குடும்பத்தாரை அன்புடன் வரவேற்று மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசு வழங்கியும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் ராமையா, ராமச்சந்திரன், மோகனகிருஷ்ணன்,  வெங்கடேசன், பாஸ்கரன், ஜனார்த்தனன், வேல்முருகன், சங்கர், செல்வம், பாலகண்டாயுதபாணி, சேதுராமன், குப்புசாமி, முருகன் மற்றும் விழுப்புரம் மாவட்ட உதவி ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன்,  சீதாபதி தஞ்சாவூர் மாவட்டம் உதவி ஆய்வாளர் திரு பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment