வேளங்கிப்பட்டு உயர்நிலைப்பள்ளி மறுசீரமைப்பு பணி பாண்டியன் எம்.எல்.ஏ நிதியுதவி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 October 2022

வேளங்கிப்பட்டு உயர்நிலைப்பள்ளி மறுசீரமைப்பு பணி பாண்டியன் எம்.எல்.ஏ நிதியுதவி.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், வேளங்கிப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியின் மறு சீரமைப்பு பணிக்கு எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார், இப்பள்ளியில் சுமார் 216 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.


இவர்களுக்கு போதுமான இட வசதி இல்லை என்றும் பழுதடைந்த கட்டிடங்களை பழுது நீக்கி தரவேண்டும் என்றும் கூடு தல் வகுப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று சிதம்பரம் எம்.எல்.ஏ-விடம் ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். 


இதனை ஏற்று கடந்த மாதம் 2-ந்தேதி பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது பழுதடைந்த கட்டிடங்களை பார்வையிட்டு அதனை மறு சீரமைப்பு மற்றும் பழுது நீக்கிட தமது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்குவதாக உறுதி அளித்தார். 


நிகழ்ச்சியில் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கொளஞ்சியப்பன், நிர்வாகிகள் ஞானசேகர், செல்வசேசுரன், மாணவரணி செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment