இனையவழி மோசடியில் ஈடுப்பட்டவர் கைது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 October 2022

இனையவழி மோசடியில் ஈடுப்பட்டவர் கைது.


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி சக்திகணேசனிடம் காட்டுமன்னார்கோவில் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நஜிர் அஹமது மகன் ரயிஸ் அஹமது வயது 30 என்பவர் புகார் மனு அளித்தார் அதில்  தான் லால்பேட்டையில் ஜித்தா என்ற பெயரில் ஏர்டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும் கடந்த 25.01.2022 ஆம் தேதி தனது அலுவலக கணிப்பொறியில் வேலை பார்த்துகொண்டிருந்தபோது யாரோ அடையாளம் தெரியாத நபர் தனது www.jeddahtravels.in என்ற ஆன்லைன் website ஐ பயன்படுத்தி 185.203.122.243 என்ற IP Address ஐ கொண்டு 9500151570 என்ற Payment Gateway முலம் சுமார் 5 ஏர் டிக்கெட்டை முறைகேடாக பதிவு செய்து வேறுசில நபர்களுக்கு வழங்கியுள்ளர்கள்.


மேற்கண்ட 5 டிக்கெட்டின் கட்டணம் ரூபாய். 1,48,461 யை எனது TOB.COM ID CJBO886 என்ற Account லிருந்து பிடித்தம் செய்யப்பட்டிருந்தது யாரோ சுயலாபத்திற்காக எனது website யை பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளனர் மோசடி செய்த நபர்மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின்பேரில் கடலூர் இணையவழி குற்ற காவல் நிலைய  வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


மோசடி செயலில் ஈடுபட்ட நபரை உடனே கைது செய்ய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சி.சக்திகணேசன்  உத்தரவு பிறப்பித்தார் இணைய வழி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசலு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா, உதவி ஆய்வாளர்  அய்யப்பராஜ் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர் விசாரணையில் சென்னை யை சேர்ந்த  பிரபுதேவா வயது 28 என்பவர் மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.


உடனே காவல்துறையினர் சென்னை்சென்று பிரபுதேவா வை கடலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்  பிரபுதேவா  தான் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமுலம் கொடுத்தார் மேற்படி பிரபுதேவா என்பவரை கைது செய்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன், வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு, பேன்கார்டு பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment