கடலூர் நகர எஸ். டி.பி.ஐ கட்சியின் சார்பாக கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஹிதாயத்துல்லா அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கான எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

கடலூர் துறைமுக பகுதியில் விழுப்புரம் மண்டல செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் அவர்கள் முதல் கட்டமாக நிலவேம்பு_கசாயம் வழங்கி தொடங்கி வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் முஹம்மது காசிம் மன்பயீ, நகர தலைவர் சேத்தப்பா இப்ராஹீம், நகர துணை தலைவர் தில்ஷாத் அலி, நகர செயலாளர் ஷரீப், பொருளாளர் ஷேக் காதர், முஸ்தாக், லியாகத் அலி உட்பட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு அனைவருக்கும் நிலவேம்பு_கசாயம் வழங்கினர்.
No comments:
Post a Comment