பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் கடலூர் மாநகராட்சி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 20 October 2022

பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் கடலூர் மாநகராட்சி.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு கடலூர் மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகர நிர்வாகம் மும்முரமா எடுத்து வருகிறது கடலூர் மாநகராட்சியில் மாநகர மேயர் திருமதி சுந்தரி ராஜா அவர்களின் அறிவுறத்தலின்படி ஆணையாளர் நவேந்திரன் பொறியாளர் புண்ணியமூர்த்தி நகர்நலஅலுவலர் அரவிந்த் ஜோதி  மற்றும் அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு வாய்க்கால்களை தூர்வாரும் பணியினை துரிதமாக செய்து வருகின்றனர்.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்  சூழாமல் இருப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது இந்நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரம் அறுக்கும் கருவி ஜேசிபி எந்திரம் நீர் இறைக்கும் மோட்டார் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது இதனை கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார் பின்னர் கடலூர் மாநகர பகுதிகளில் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் வடிக்கால் வாய்க்கால்கள் முழுவதும் தூர்வாரப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுமட்டுமில்லாமல் இன்றிலிருந்து  திடீரென்று மழை அதிகரித்தாலும்  மரங்கள் விழுந்துள்ளபகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை அப்புறப்படுத்தியும் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


ஆய்வின் போது கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் கடலூர் மாநகராட்சி திமுக நகர செயலாளர் கே எஸ் ராஜா செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி நகர்நலஅலுவலர் அரவிந்த் ஜோதி மாணவரணி துணை அமைப்பாளர் கே எஸ் ஆர் பாலாஜி மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா இளையராஜா ,சங்கீதா, மாமன்ற உறுப்பினர்கள் பார்வதி, செந்தில்குமாரி இளந்திரையன் , சசிகலா ஜெயசீலன், விஜயலட்சுமி செந்தில், சுபாஷினி ராஜா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பலர் இருந்தனர். 

No comments:

Post a Comment