கடலூரில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 October 2022

கடலூரில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்.

அக்-1 தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் சார்பில் நடைபெற்றது.


இம்முகாமில் இணை இயக்குனர் மருத்துவ நலப்பணிகள் மருத்துவர் ரமேஷ் பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பூங்கொத்தும் பாராட்டு சான்றிதழும் வழங்கி பாராட்டினார். பின்னர் இரத்ததான தன்னார்வலர்கள் ஒன்றினைந்து இரத்ததானம் செய்வோம் இன்னுயிர் காப்போம் என்று உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குருதி பரிமாற்று குழும அலுவலர் மருத்துவர் குமார் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் நடராஜன் நிலைய மருத்துவர் பாலகுமாரன் ஏ ஆர் டி கூட்டு மருந்து சிகிச்சை மருத்துவர் தேவ்ஆனந்த் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர்  செல்வம் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் ரத்த வங்கி மருத்துவர் வினோத் செவிலியர்கள்  பிரியா, சுமையாபானு, ஆய்வக நுட்பனர் தேவநாதன்,பழனி, பாலமுருகன், வனிதா,சுவலட்சுமி, தமிழ்ச்செல்வி மாமன்ற உறுப்பினர் ஏர்டெல் சரவணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனோகர் சிவராமகிருஷ்ணன் ஜோஸ் மகேஷ் ராம்குமார் நிஜந்தன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக ரத்த வங்கி ஆலோசகர் சந்தோஷ் குமார் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment