குப்பை கிடங்கை அகற்றிய பகுதியை ஆய்வு செய்த மாநகர மேயர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

குப்பை கிடங்கை அகற்றிய பகுதியை ஆய்வு செய்த மாநகர மேயர்.

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பரம் சாலை மோகினி பாலம் கெடிலம் அணைக்கரையொட்டி கடந்த 10 ஆண்டுகளாக கடலூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் இவ்விடத்தில் கொட்டப்பட்டு வந்தன,  இதனால் அருகில் உள்ள சுடுகாடு முழுவதும் மறைக்கப்பட்டும் அடிக்கடி குப்பைகளை சமூக விரோதிகளால் தீவைத்து எரிப்பதால் அதனால் ஏற்ப்படும் புகை மற்றும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர் இதுகுறித்து கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா விடம் புகார் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுரைத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் மற்றும் ஊழியர்கள் 10 ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பைகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஒரே இரவில் அகற்றப்பட்டதையும் இரவு நேரத்திலும் குப்பைகள் அகற்றப்படுவதை பார்வையிட்டார் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சிமெண்ட் ஆலைகளுக்கு  அனுப்பப்பட்டது இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேயர் சுந்தரிராஜாவை பாராட்டினர்.


இந்நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் .ஆர் .கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் ஏற்கனவே குப்பைகள் அகற்றப்பட்டு இருந்த இடத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில பூங்கா அமைக்கும் பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டது இந்த இடத்தை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா  நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் மாநகராட்சி சார்பில் புதிய பூங்கா அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினார்.


ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் பொறியாளர் புண்ணியமூர்த்தி மாமன்ற உறுப்பினர் ஏஜிஎம் வினோத் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே எஸ் ஆர் பாலாஜி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment