கடலூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறகு பந்து விளையாட்டு போட்டியில் மற்றும் பரிசளிப்பு விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 October 2022

கடலூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறகு பந்து விளையாட்டு போட்டியில் மற்றும் பரிசளிப்பு விழா.

கடலூர் ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சி குமார பேட்டையில் ஜிபி அகாடமி சார்பில் தித்திக்கும் தீபாவளி இறகு பந்து விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளுக்கு திருப்பாப்புலியூர் ஆர் .ஆர். மருத்துவமனை கண் மருத்துவர் டாக்டர். வசந்தகுமார் தலைமை தாங்கினார். 


மூத்த இறகு பந்து விளையாட்டு வீரர் கூத்தப்பாக்கம் சந்தோஷ் குமார் தித்திக்கும் தீபாவளி இறகு பந்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார், விளையாட்டு வீரர்களை விளையாட்டு வீரர் பெத்தாங்குப்பம் ராஜவேலு விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்தினார். விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மூத்த விளையாட்டு வீரர் பாஸ்கரன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 


மூத்த விளையாட்டு வீரர் செந்தில் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்த விளையாட்டு போட்டியில் முதல் பரிசை சந்தோஷ் கண்ணன், வழக்கறிஞர் அர்ஜுனன், இரண்டாம் பரிசை காரைக்காடு ராஜ்குமார், சுந்தர் கணேசன், மூன்றாம் பரிசை அபிஷேக் ,ஸ்ரீவர்த்தன், ஆகியோர் பெற்றனர். இறுதியில் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.தி. இராஜமச்சேந்திர சோழன் நன்றி கூறினார்.No comments:

Post a Comment