வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுடனான அரசு திட்ட செயல்பாடுகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 11 October 2022

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுடனான அரசு திட்ட செயல்பாடுகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை குமார் ஜெயந்த்  தலைமையில் நில நிர்வாக ஆணையர்  எஸ்.நாகராஜன், ஆணையர் சமூக பாதுகாப்புத்திட்டம் டாக்டர்.என்.வெங்கடாசலம், இணை ஆணையர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஏ.ஜான் லூயிஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், ஆகியோர் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.இராதாகிருஷ்ணன்  பங்கேற்று தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.


இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:" வருவாய்த்துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் சமூக பாதுகாப்பு திட்டம், பட்டா மாறுதல், நில மாற்றம், நில உரிமை மாற்றம், நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


கடலூர் மாவட்டத்தில் 5 பெரிய ஆறுகள் உள்ளதாலும், மேற்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் கடலில் கலக்கக்கூடிய மாவட்டமாக இருப்பதால் ஆண்டுதோறும் பேரிடரால் பாதிக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளாக கடலூர் மாவட்டத்தில் மிக அதிக பாதிக்கக்கூடியதாக 38 பகுதிகள், அதிகமாக பாதிக்கக்கூடிய 54 பகுதிகள், மிதமாக பாதிக்கக்கூடிய 19 பகுதிகள், குறைவாக பாதிக்கக்கூடிய 167 பகுதிகள் என மொத்தம் 278 பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 335 கி.மீட்டர் மழைநீர் வடிகால்களும், 3521கி.மீட்டர் கால்வாய்களும், 117 கி.மி இதர வடிகால்களும் தூர் வாரப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 194 தற்காலிக தங்குமிடங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் பேரிடர் காலத்தில் எந்தெந்த பகுதிகள் பாதிப்புகள் ஏற்பட உள்ளது என்பதை தெரியப்படுத்தும் வகையில் முதல் தகவல் அளிப்பவர்களாக 5000 நபர்கள் கண்டறியப்பட்டு குறுவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவ்வப்போது பாதிப்புகளை தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக 1077 என்ற எண்ணில் அவசர கால கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு III பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம். இக்காலகட்டங்களில் மாவட்ட அளவில் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து குழுக்கள் அமைத்து பேரிடர் தொடர்பான பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளை ஈடுபடவேண்டும் என தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) / திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பன், கடலூர் மாநகர மேயர் திருமதி.சுந்தரி ராஜா, துணை பா.தாமரைச்செல்வன், வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment