சி.எஸ்.ஐ. சுற்றுச்சூழல் கரிசனை வாரியம் மற்றும் நம்ம கடலூர் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

சி.எஸ்.ஐ. சுற்றுச்சூழல் கரிசனை வாரியம் மற்றும் நம்ம கடலூர் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி.

சி.எஸ்.ஐ. சுற்றுச்சூழல் கரிசனை வாரியம் மற்றும் நம்ம கடலூர் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


விழிப்புணர்வு பேரணியை சுற்றுச்சூழல் கரிசனை வாரிய தலைவர் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் இயக்குனர் டாக்டர் மேத்யூ கோஷி புன்னக்கட் டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கிதொடங்கி வைத்தனர் துணைமேயர் பா.தாமரைச்செல்வன் சென்னை பேராயர் அஷோக்குமார், செயலர் டைட்டர்ஸ் எர்னெஸ்ட் செல்லதுரை ஏசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியில் மரம் நடுவோம் மழை வளம் பெறுவோம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி  ஊர்வலமாக பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வழியாக சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயத்தை முடிவடைந்தது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சிறப்பு போட்டிகள் மற்றும் கலை விழா நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் கடலூர் துறைமுகம் தூய தாவீது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என். கங்கா தேவி, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி. பெருமாள், நம்ம கடலூர் நிர்வாகிகள் ஓம். பிரகாஷ் ,நெல்சன், எபினேசர் ,மகேஷ்,வன அலுவலர் செல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment