புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 October 2022

புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற 3-வது வார்டு கவுன்சிலர் புஷ்பரேகா சுதாகர் தலைமை தாங்கினார். 1-வது வார்டு கவுன்சிலர் காளிமுத்து என்கிற பாரதிதாசன் முன்னிலை வகித்தார். 


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன், புவனகிரி சட்டமன்ற தொகுதி செயலாளர் வே.சுதாகர், புவனகிரி நகர பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப் பாட்டமானது, 3-வது வார்டில் சாலை, குடிநீர், தெருவிளக்கு, இடுகாட்டுக்கு செல்லும் பாதை, வடிகால் வசதி, சுகாதார வளாகம், குளம் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிக ளளை பேரூராட்சி நிர்வாகம் செய்யாமல் பாரபட்சம் காட் டுவதாகவும், இதை கைவிட்டு பணியை செய்து கொடுக்க வலியுறுத்தி நடைபெற்றது. 


ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத் தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment