தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 October 2022

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சிறப்பாக பணியாற்றிய தலைவர் ஜனார்த்தனனுக்கு பாராட்டு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் மாநில நிர்வாகிகள், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சிதம்பரத்தில் நடைபெற்றது .


இவ்விழாவில் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் ஆற்றிய பணிகளை பாராட்டி தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக துணைவேந்தர் ந.பஞ்சநாதம் பொன்னாடை அணிவித்து கேடையம் வழங்கி கௌரவித்தார்.


தமிழ்நாடு மேலநிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் அன்மையில் சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது.  


மாவட்ட தலைவர் என்.இரவி தலைமை தாங்கினார்.  செயலாளர் வி.முத்துக்குமரன் வரவேற்று பேசினார். விழா ஒருங்கிணைப்பாளர் ஜி.பாண்டியன், ஜி.கௌஞ்சிநாதன், எம்.மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வாழ்த்தி பேசினார்.


பணிநிறைவு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களையும் மாநில நிர்வாகிகளையும் பாராட்டி சென்னை தமிழ்நாடு அசிரியர் கல்வியல் பல்கலைகழக துணைவேந்தர் ந.பஞ்சநாதன் பேசினார்.


மாநில நிர்வாகிகள் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.திருநாவுக்கரசு, டி.இராம்மூர்த்தி, த.ராமச்சந்திரன், எஸ்.ரெங்கநாதன்  தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற எஸ்.மோகன்குமார், ஜி.உதயகுமார், பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் த.பாலு, கே.சரவணன், ஜி.அந்திரேயா, எல்.குமாரசாமி, எஸ்.சங்கராஜன், ஜி.மதியழகன், ஆர்.ரவிசங்கர், அ.அழகம்மை, கே.திருக்குமரேசன், ஆர்.ரவிசந்திரன் கே.மணிமாறன் எஸ்.பத்மநாபன் என்.எழிலரசன் ஆகியோருக்கு துணைவேந்தர் ந.பஞ்சநாதன் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி பாராட்டினார். தீர்மானங்கள் 

  1. அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசாணை எண் 101 ரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.  இதனை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 151 வெளியிட்டுள்ளது.  இதன்படி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் சுயநிதி பள்ளிகள் என மூன்று பணியிடம்  உருவாக்கி அதற்கான அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வருவாய் மாவட்டத்தில் மாணவர் எண்ணிக்கை பள்ளிகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக தொடக்கக் கல்வி அலுவலரும் இடைநிலை கல்வி அலுவலரும் என 32 கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி ஆணையிட்டுள்ளார் இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
  2. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ஆசிரியர் கழகம் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
  3. இதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தொகுப்பூதிய காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கலாம் என்பதனை தமிழ்நாடு அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
  4. தமிழ்நாட்டில் மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொழில் திறன்கள் என்ற புதிய பாடத்தினை அறிமுகம் செய்து அதற்கான தனியாக சான்றிதழ்களை வழங்க ஆணையிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. 
  5. அதே வேளையில் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாகும் போது அப்பள்ளியில் தொழிற் பாடப் பிரிவினை மூடும் நடவடிக்கை கைவிட்டு தொடர்ந்து தொழிற்கல்வி பெற ஏதுவாக தமிழ்நாட்டில் காலியாக உள்ள 600க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
  6. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வேளாண் அறிவியல்,  தணிக்கையியல்  அடிப்படை இயந்திரவியல் மின்னியல் மின்னணுவியல் போன்ற ஏதாவது ஒரு தொழிற்கல்வி பாடத்தினை கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்

முடிவில் தொழிற்கல்வி ஆசிரியர் க.நடராஜன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment