அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்த நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட மைய நூலக வளாகத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 October 2022

அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்த நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட மைய நூலக வளாகத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட மைய நூலகம் சார்பில்  அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்த நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று மதியம் 2 மணிக்கு மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுந்தரி ராஜா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.கடலூர்மாமன்ற உறுப்பினர்கள் தா.பிரசன்னா, சுபாஷினி ராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் நூலகர் திருமதி.பாப்பத்தி  வரவேற்புரையாற்றினார், திருமதி.பாலசரஸ்வதி தலைமை தாங்கினார், பாஸ்கரன், சாய்ராம், அருள்ஜோதி, மனோகரன், திருமதி.கலைசெல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர், வாழ்த்துரை மருத்துவர்.கலைவேந்தன்,  துரை.தட்சிணாமூர்த்தி, அவர்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செ.பிரகாஷ்,  சாரல் சங்கர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர் 

No comments:

Post a Comment