வள்ளலார் 200 வது ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு ஆலோசனை கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 October 2022

வள்ளலார் 200 வது ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்.

கடலூர் மாவட்டம் வடலூர் சத்யநாதர் சபையில் வள்ளலார் அவர்களின் 200 வது ஆண்டு அவதார தினத்தை கொண்டாடும் வகையில் குறிஞ்சிப்பாடி திமுக சார்பில் வடலூர் பார்வதிபுரம் கிராம நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் வடலூர் நகராட்சி  சார்பில் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் குழு அமைத்து வள்ளலார் 200 -வது ஆண்டு அவதார தினத்தை சிறப்பாக கொண்டாட வடலூர் வள்ளலார் தெய்வநிலையமும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து சிறந்த பாடகர்களை கொண்டு திருஅருட்பா பாடல் இசை நிகழ்ச்சி மற்றும் சன்மார்க்க பேச்சாளர்கள் கொண்டும் விழாவினை சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் விழாவில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது 

No comments:

Post a Comment