தீர்த்தனகிரி கிராமத்தில் அண்ணல் காந்தியடிகள் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 October 2022

தீர்த்தனகிரி கிராமத்தில் அண்ணல் காந்தியடிகள் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட தீர்த்தனகிரி ஊராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில்  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.


இக்கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு நடைபெறும் இந்த கிராமசபைக் கூட்டத்தின் வாயிலாக நாம் அனைவரும் அண்ணல் காந்தியடிகள் கடைப்பிடித்த எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பொது விஷயங்களில் அக்கறை, நாம் யாரையும் எதிர்பாராமல் சுயஉதவிகளை பூர்த்தி செய்து கொள்ளுதல் ஆகியவற்றை நாம் கடைபிடித்து நாமும் நம் கிராமத்தை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். 

இக்கிராம சபை கூட்டம் என்பது ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்று ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, மேலும் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்காக தீர்மானங்கள் குறித்து நன்கு தெரிந்து கொண்டு அவற்றில் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து தீர்மானம் நிறைவேற்றப்படுவது, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், பண்ணை சார்ந்த தொழில்கள் மற்றும் பண்ணை சாரா தொழில்கள் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அனைவருக்கும் குடிநீர் கிடைக்கப்பெறும் வகையில் குடிநீர் பயன்பாடுகள் குறித்து விவாதித்தல். கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் குறித்து விவாதித்தல், கிராமப்புற சாலைப்பணிகள் மேம்படுத்துதல், மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான விபரங்கள் மக்களை சென்றடையும் வகையில் இது தொடர்பாக முகாம்களில் கிராமபுற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்குவிப்பதை குறித்தும், மின் சிக்கனத்தை குறித்து விவாதித்தல் போன்ற 14 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. 


மேலும் இதுபோன்ற கிராமசபைகளில் தெரிவிக்கப்படும் தீர்மானங்களை பொதுமக்கள் நீங்கள் அனைவரும் நன்கு தெரிந்துகொண்டு தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு உங்களுடைய கருத்துக்களை தெரிவித்து அனைத்து வகையிலும் கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.


கடலூர் மாவட்டத்தில் 683 ஊராட்சிகளிலும் உள்ள அரசு கட்டிடங்களான ஊராட்சி மன்ற அலுவலகங்கள், ஊராட்சி சேவை மையங்கள் பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் 7 நாட்களில் 1465 கட்டமைப்புகள் உருவாக்கி உலக சாதனை நிகழ்த்தியதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் இதற்கு உறுதுணையாக செயல்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டுதலை தெரிவித்து இதுபோன்ற அரசு திட்டங்கள் கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு முதன்மை மாவட்டமாக முன்னேற்ப்பு பணிகளை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்து தீர்த்தனகிரி அரசு மேல்நிலைப்பள்ளி உட்புற வளாக பகுதி தாழ்வாக உள்ளதால் மழை நீர் தேங்குவதாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையினையும், மேலும் தீர்த்தனகரி, கருவேப்பம்பாடி, புதனகிரி, டி.கல்லையங்குப்பம், பொட்டைகரைமேடு ஆகிய பகுதிகளை சார்ந்த பொதுமக்களுக்கு தீர்த்தனகிரி பகுதியில் 495 இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டுள்ள இப்பகுதி தாழ்வாக உள்ள இதனை சீரமைத்து மேடான பகுதியாக உருவாக்கிட பொதுமக்கள் வைத்த கோரிக்கையிைனையும் ஏற்று அவற்றை விரைந்து சீரமைக்க வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி மாரியப்பன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார் அனைத்து துறையை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிதகள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment