பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் சேவை கிடைக்காமல் குறிஞ்சிப்பாடி தொகுதியில் வாடிக்கையாளர்கள் அவதி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 27 September 2022

பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் சேவை கிடைக்காமல் குறிஞ்சிப்பாடி தொகுதியில் வாடிக்கையாளர்கள் அவதி.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் இருக்கிறதா என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள், குறிஞ்சிப்பாடி அஞ்சல் துறையில் நெட்வொர்க் கிடைக்காததால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியாமல் அதிகாரிகள் தவிப்பு குறிஞ்சிப்பாடி பி.எஸ்.என்.எல் அதிகாரிகளின் அலட்சியத்தால் அஞ்சலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தினசரி வாய் சண்டை கரன்ட்டு கட்டானாலும் கைப்பேசி தொலைபேசி சேவைகள் சரி வர கிடைப்பதில்லை என புகார்.


பொது மக்களுக்கு அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்களைப் பெற ஆன்லைனில் பதிய முடியாமல் அவதி, ஒவ்வொருவரின் மனைவிக்கு  அடுத்தது இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் கைபேசி மற்றும் இணைய வழி சேவைகள் முக்கியம் வாய்ந்தது, பி.எஸ்.என்.எல்  பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு தொடர் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை. குறிஞ்சிப்பாடியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. குறிஞ்சிப்பாடி தொகுதியில் பல நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவன  அதிகாரிகளின் அலட்சியத்தால் பி.எஸ்.என்.எல் கைபேசி இணைப்புகள் தொலைபேசி இணைப்புகள் இன்டர்நெட் சேவைகள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் சரியான முறையில் நெட்வொர்க் சேவை கிடைக்காததால் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியாமல் அரசு அலுவலர்களும் அஞ்சலகங்களின் அதிகாரிகளும்  வணிக நிறுவனங்களும் சேவை அளிக்க முடியாமலும் பயன்படுத்த முடியாமலும் திணறி வருகின்றனர். 


இதனால்  அதிகாரிகள் வணிக நிறுவனங்களின் முதலாளிகளிடையே வாய் தகராறு மோதல்கள் ஏற்பட்டு வருகின்ற சூழலை உருவாக்குகிறது ஆகையால் சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்ட பி.எஸ். என். எல் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக குறிஞ்சிப்பாடி பகுதிகளில் தடையில்லா தொடர் நெட்வொர்க் சேவை தொலைதொடர்பு சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பயனாளிகளும் கோரிக்கை வைக்கின்றனர். 

No comments:

Post a Comment