குறிஞ்சிப்பாடியில் பெட்டி கடையில் ஹான்ஸ் பாக்கெட் விற்றவர் கைது செய்து சிறையில் அடைப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2022

குறிஞ்சிப்பாடியில் பெட்டி கடையில் ஹான்ஸ் பாக்கெட் விற்றவர் கைது செய்து சிறையில் அடைப்பு.


குறிஞ்சிப்பாடி காவல் துறை சரகத்திற்கு உட்பட்ட கடைகளில் போதை வஸ்து பொருட்கள் விற்பவர் மீது  கடுமையான நடவடிக்கை பாயும் என சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா எச்சரிக்கை.


குறிஞ்சிப்பாடியில் ஒட்டுமொத்தமாக ஹான்ஸ் குட்கா பான்பராக் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துக்கள் விற்பனை செய்யக்கூடாது என குறிஞ்சிப்பாடி காவல்துறை எச்சரித்து விற்பனை செய்பவர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று புவனகிரி சாலையில் விஜிபி என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வரும் வெங்கடாசலம் மகன் கோவிந்தன் (வயது 52) இவர் கடையில்  ஹான்ஸ் பாக்கெட்டுகள் கூல் லிப் உள்ளிட்ட போதை வஸ்துகள் பொருட்களை விற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததால் குறிஞ்சிப்பாடி சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா அவர்கள் கடைக்குச் சென்று பார்த்தபோது 300-க்கும் மேற்பட்ட போதை வஸ்து பாக்கெட்டுகள் இருந்ததால் பறிமுதல் செய்தும் பெட்டிக்கடை உரிமையாளரை கைது செய்தனர்.


இவரது கடையை குறிஞ்சிப்பாடி வருவாய் ஆய்வாளர்  சோபா அவர்கள் கடைக்கு சீல் வைத்தனர். சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா அவர்கள் போதை வஸ்து பாக்கெட்டுகள் விற்றவர் மீது வழக்கு பதிவு செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.


இதைப் பற்றி சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா அவரிகள் கூறுகையில் குறிஞ்சிப்பாடியில் போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என வணிகர் சங்க மூலமாகவும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மேடைகளில் சென்று  விழிப்புணர் ஏற்படுத்தியும் பல்வேறு முறைகளில் எச்சரிக்கை செய்து  வந்தோம். மேலும் மொத்தமாக கொள்முதல் செய்து வந்து  கடைகளில்  விற்பனை செய்த வியாபாரிகளையும் பொறிவைத்துப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தோம் குறிஞ்சிப்பாடி காவல்துறை மிகவும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இருந்தாலும் இதையும் மீறி சில பெட்டிக் கடைக்காரர்கள் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்து கொண்டு வண்ணம் உள்ளது இதோடு போதை வஸ்து பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் நாங்கள் கண்டு பிடித்து எங்களிடம் பிடிபட்டால் விற்பனை செய்தவர் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த பதிவின் மூலம் எச்சரிக்கை செய்கிறோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment