அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 September 2022

அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி அவர்கள் துணைத் தலைவர் தமிழ் செல்வி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் கோ.பாலமுருகன்  அவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.


கூட்டத்தில் 15வது நிதி மானியம் திட்டத்தின் கீழ் ரூ.38.40 லட்சத்தில்  நிர்வாகம் அனுமதி பெற்று பணிகளான மன்ரோடு குப்பம் குறுக்கு தெருக்களில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைத்தல் பணி, கழிவரைகள் புதுப்பித்தல் பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புனரமைப்பு  செய்தல் ஆகிய பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் அவர்கள் உறுப்பினர்களிடம் கூறினார்.


பணிகள் துவங்க உள்ள ரூ.15 லட்சத்தில் வடக்கிருப்பு தபால் நிலையம் எதிரில் கழிவறை அமைத்தல் பணி மற்றும் ரூ.87.00 லட்சத்தில் மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி ஆகியவற்றை பேரூராட்சி மன்ற தலைவர் அவர்கள் அறிவித்தார்.

No comments:

Post a Comment