பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வு காணுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 30 September 2022

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வு காணுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம்.

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வு காணுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணையவழி குற்றப்பிரிவு)  சீனிவாசலு அவர்கள் துவக்கி வைத்தார். 


சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி(போக்சோ நீதிமன்றம்) எழிலரசி  அவர்கள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் தாக்குதல், செல்போனில் ஆபாச படங்கள் வந்தால் புகார் செய்வது, சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும், அக்குற்றங்களை கையாளுவது எப்படி, சட்ட திருத்தங்களை எப்படி எதிர்கொள்வது, பதிவு செய்யப்படும் வழக்குகளை எப்படி விரைவாக முடிப்பது பற்றியும் எடுத்து கூறினார். 


இந்நிகழ்ச்சியில் கடலுார் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. சித்ரா, புதுச்சேரி நிர்வாக அறங்காவலர் திருமதி. லலிதாம்பாள், கடலூர் மைத்ரி திட்ட மாவட்ட ஒருங்கினைப்பாளர் திருமதி. ஜெபஸ்ரீ, கடலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திருமதி. கெஜலட்சுமி, பெண் காவல் ஆய்வாளர்கள் திருமதி. மகேஷ்வரி, திருமதி. வனஜா, திருமதி. விஜி, திருமதி. ரேவதி, திருமதி. மலர்விழி, திருமதி.லதா, திருமதி. பாண்டிச்செல்வி, திருமதி. அமுதா, திருமதி. மீனா, திருமதி. வள்ளி, திருமதி. சரஸ்வதி, திருமதி. அன்னக்கொடி, திருமதி. கிருபாலட்சுமி, மற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment