சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 26 September 2022

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது, ஆசிரியர் தின விழாவில் 11 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் அவார்ட் 20 22 வழங்கப்பட்டது.

 

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முத்தையா தொழில் நுட்ப கல்லூரி ஓய்வு பெற்ற துறை தலைவர் முனைவர் ம. கோவிந்தராஜன் அவர்கள் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி சிறப்புரையாற்றினார். 


ஆயினும், அம்பாள்புரம், முடசல் ஓடை, ராதாவிளாகம், பரங்கிப்பேட்டை, கிலாங்காடு, கிள்ளை எம்‌.ஜி.ஆர். நகர், பஞ்சங்குப்பம் ஆகிய கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ராஜன், செந்தில் குமார், குணாதேவி, ஜலசாட்சி, அமுதா, மஞ்சுளா, ஜரீனா பேகம், மகாலட்சுமி, சாந்தி ஆகியோரும், சிதம்பரம் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளியின் உயர்கல்வி ஆசிரியர் பழனியப்பன், ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் மணிவாசகம் ஆகியோர் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன.


விழாவில் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் துணைத் தலைவர் தில்லை பள்ளி ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் எம்.தீபக்குமார், சாசனத் தலைவர் ஞான அம்பலவாணன், முன்னாள் துணை ஆளுநர்கள் மோகன், கமல்சந்த், முன்னாள் தலைவர்கள் முனைவர்கள் கதிரேசன், ஜி. ரவி ஆர். எஸ். ரவிச்சந்திரன் ஆ. கலைச்செல்வன், முன்னாள் தலைவர் மார்க்கெட்நாகராஜன் , இயக்குநர் முனைவர் ரகுபதி, பொருளாளர் எல் சி ஆர் நடராஜன் பூவாலை தலைமை ஆசிரியர் எம் ஜி தியாகராஜன், அக்குஹீலர்.ஆணந்த பிரகாஷ் மற்றும் விருது பெற்ற ஆசிரியர்களின் உறவினர்கள் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர், .இறுதியில் செயலாளர் முனைவர் க. சின்னையன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment