வடலூர் ஆர் கே சிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 September 2022

வடலூர் ஆர் கே சிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வானதிராயபுரம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட ஆர்.கே சிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


மேலும் காட்டு கொல்லை கல்லுகுழி போன்ற பகுதிகளுக்கு ஆர் கே சிட்டி மெயின் சாலை வழியாக தினமும்  நெய்வேலி சுரங்கம் 1 A விற்கு பலர் வடலூரிலிருந்து பணிக்கு செல்வதும் மற்றும் வனதிராயபுரம் தென்குத்து பகுதிக்கு கல்லுகுழி வழியே சென்று வருகின்றனர் இச்சாலை நீண்ட நாட்களாக அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் வாகனங்கள் செல்லும் பொழுது சாலையில் பள்ளம் விழுந்து சேரும் சகதியுமாக காணப்படுகிறது இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விடுகின்றனர்.


சமீபத்தில் வனதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் பிரதம மந்திரி சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஆர்.கே சிட்டி பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு மட்டும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது மேலும் இந்த சிமெண்ட் சாலைக்கான ஒப்புதல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டு தற்பொழுது முடிக்கப்பட்டது.


மேலும் உள்ள மூன்று தெருகளில் சாலை அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக உள்ளது எனவே சாலை மேற்கொள்ளும் பணியை விரைந்து மேற்கெள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment