வடலூர் வாரச்சந்தையில் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 29 September 2022

வடலூர் வாரச்சந்தையில் ஆய்வு.

வடலூர் வாரச்சந்தையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும், கடைகளின் இட பற்றாக்குறையை கருத்தில் கொண்டும்  பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் வி.சிவக்குமார் அவர்கள் இன்று உழவர் சந்தை மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களை பார்வையிட்டு காய்கறி சந்தை மற்றும் கறிக்கடைகளை அமைப்பதற்கு இடங்களை ஆய்வு செய்தார். 


உடன் வடலூர் நகர மன்ற தலைவர்  சு.சிவக்குமார், வடலூர் நகராட்சி ஆணையர் குணாளன்  நகராட்சி பொறியாளர்  சிவசங்கரன்  திமுக நகர கழக செயலாளர் தன.தமிழ்செல்வன் நகர் மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment